சுதந்திர கிண்ணம் ஆரம்பம்

இலங்கையின் 70வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் முகமாகவும், இலங்கை கிரிக்கெட்டின் 70 வருட பூர்த்தியை  முன்னிட்டும் இலங்கை கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 20-20 கிரிக்கெட் போட்டி தொடரான நிதாஸ் கிண்ணம் என அழைக்கப்படும் சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இன்று(06/03/2018), கொழும்பு ஆர்.பிரேமதாசா சர்வதேசக் கிரிக்கெட்  மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இந்த தொடரில் பங்குபற்றவுள்ளன. இன்று ஆரம்பிக்கும் இந்த தொடர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரும். சகல போட்டிகளும் இரவுப்  போட்டிகளாக இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாசா சர்வதேசக் கிரிக்கெட்  மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளன.

முதலாவது போட்டி – இலங்கை எதிர் இந்தியா – மார்ச் 06

2 வது போட்டி – பங்களாதேஷ் எதிர்  இந்தியா – மார்ச் 08

3 வது போட்டி – இலங்கை எதிர் பங்களாதேஷ்  – மார்ச் 10

4 வது போட்டி – இலங்கை எதிர் இந்தியா – மார்ச் 12

5 வது போட்டி – பங்களாதேஷ் எதிர் இந்தியா –  மார்ச் 14

6 வது போட்டி – இலங்கை எதிர் பங்களாதேஷ்  – மார்ச் 16

இறுதிப் போட்டி –  மார்ச் 18

இந்த மூன்று அணிகளும் அண்மைக்காலத்தில் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவது இந்த தொடரின் விறுவிறுப்பு தன்மையை குறைக்குமா? அல்லது அதே விறு விறுவிறுப்புடன் நடைபெறுமா? என்பதனை இந்த தொடர் நிறைவடையும் வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆசிய அணிகளான பாகிஸ்தான்  மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இலங்கை அணி போட்டிகளில் அண்மைக்காலத்தில் விளையாட நிலையில் அந்த அணிகளை இந்த தொடரில் இணைத்திருந்தால் சுவாரசியம் அதிகமாக இருந்திருக்கும். அல்லது நான்கு அணிகள் அடங்கிய தொடராக இந்த தொடரை நடத்தியிருந்தால் இந்த தொடர் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.

சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்களான மஹமதுல்லா, டினேஷ் சந்திமால், ரோஹித் ஷர்மா ஆகியோர் கிண்ணத்துடன் காணப்படுகிறார்கள்.

-விமல்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*