செயற்கை காற்பந்து மைதானம்  இலங்கையில்

சர்வதேசக் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதியுதவியுடன், இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை காற்பந்து மைதானம், கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை   பெத்தகனாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 வீரர்களும், 15 உத்தியோகஸ்தர்களும் பயிற்சிகளில் ஈடுபடக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.  அதேவேளை எவ்வாறான காலநிலை காணப்பட்டாலும் போட்டிகளில் விளையாட முடியுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று (13/03/2018) காலை 9.30 இற்கு இந்த மைதானத்தை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன  தலைவர் அனுர டி சில்வா, செயலாளர் ஜஸ்வர் உமர் ஆகியோருடன் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட சம்மேளன அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இவ்வாறான சிறந்த மைதானம் ஆரம்பிக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை காற்பந்தாட்ட வளர்ச்சியில் முழுமையான ஆதரவை, விளையாட்டு துறை அமைச்சு வழங்குமென விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டை நோக்கிய இலங்கை காற்பந்தாட்ட அபிவிருத்தியின் திட்டங்களில் இதுவொன்று. நாடளவியிய ரீதியில் காற்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்த இன்னமும் பல திட்டங்கள்  முன்னெடுக்கப்படுமென இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

-விமல்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*