தமித் ரம்புக்வெல்ல போதையில் கைது

இலங்கை கிரிக்கெட் அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ள ரமித் ரம்புக்வெல்ல மது போதையில் வாகனத்தை ஓடிய சந்தேகத்தின் பேரில் இன்று(10/03/2018) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். நாவல வீதியில் இவர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை துப்பாக்கியால் அடித்து  அச்சறுத்திய சம்பவத்தின் பின்னரே  இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   ஆனால் குறித்த தாக்குதல் சமப்வம் தொடர்பில் அவர் செய்து செய்யப்படவில்லை என்பதும், குடித்து விட்டு வாகனம் செலுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே  கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

இவர் 2016 ஆம் ஆண்டிலும் இதே போன்று குடிபோதையில் வாகனத்தை ஒட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார். இலங்கை 19 வயது அணிக்காக விளையாடிய வேளையில், வெளிநாட்டில் பெண்களுடன் இரவுச் சுற்றுலாவுக்கு சென்றார் என்ற சர்ச்சையில் சிக்கியவர், 21 வயதான வேளையில்  இலங்கை அணி மேற்கிந்திய அணியுடன் போட்டியினை நிறைவு செய்துகொண்டு திரும்பிய வேளையில் 35,000  அடி உயரத்தில், குடி போதையில்  விமானத்தின் கதவினை திறக்க முற்பட்டு ஒரு சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தார்.

தமித் ரம்புக்வெல்ல பாராளுமன்ற உறுப்பினரும்,  முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

-விமல்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*