பிரித்து மேய்ந்த சிங்கங்கள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது சுதந்திர தின கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பாடி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது. குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக ஆகியோர் நல்ல முறையில் இணைப்பாட்டங்களை வழங்கியது மாத்திரமல்லாமல் வேகமாகவும் துடுப்பாடினார்கள். 13 வது ஓவரில் மஹமதுல்லா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. 16 பந்துகளில் 3 விக்கெட்களை இலங்கை அணி இழந்தது. கடந்த காலங்களிலும் இலங்கை அணியில் இந்த பிரச்சினை காணப்பட்டுள்ளது. விக்கெட்கள் வீழ ஆரம்பித்தால் தொடர்ச்சியாக வீழ்த்தப்படும். மீண்டும் இணைப்பாட்டங்களை உருவாக்கி ஓட்டங்களை ஓடி பெற்று மீண்டும் அடித்தாட முயற்சிக்க வேண்டும்.  குசல் பெரேரா, உப்புல் தரங்க ஆகியோர் மீண்டும் இணைப்பாட்டத்தை உருவாக்கியதோடு வேகமாக அடித்தாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.  இறுதி ஓவரில் இலங்கை அணி இரண்டு விக்கெட்களை இழந்தது.

இலங்கை அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து  214 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் பெரேரா 02 ஆறு ஓட்டங்கள், 08 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 74 (49) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 06 ஆறு ஓட்டங்கள், 02 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 57(30) ஓட்டங்களையும், உப்புல் தரங்க ஆட்டமிழக்காமல் 32 (15) ஓட்டங்களையும் , தனுஷ்க குணதிலக 26(19) ஓட்டங்களையும், பெற்றனர்.  இறுதி ஓவரில் களமிறங்கிய ஜீவன் மென்டிஸ் 06 (02) ஓட்டங்களையும் பெற்றார்.   டினேஷ் சந்திமால் 02(04) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த அதேவேளை தஸூன் சாணக்க ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். திசர பெரேரா இறுதி ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி 7 பந்துவீச்சாளர்களை பாவித்த போதும் இலங்கை அணிக்கு அழுத்தங்களை வழங்கவில்லை. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், முஸ்டபைஷூர் ரஹ்மான் 03 (04 – 49/3) விக்கெட்களையும், மஹமதுல்லா 02 (02 – 15/2) விக்கெட்களையும், டஸ்கின் அஹமட் 01 (03 – 40/1) விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

 

6.45 PM

மைதான விரிப்புகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. ஆடுகளும் தயார் செய்யப்பட்டு விட்டது. விரைவில் நாணய சுழற்சி இடம்பெறவுள்ளது.

6.28 PM
மைதானத்தின் மேலே மூடப்பட்டிருந்த விரிப்புகள் அகற்றப்படுகின்றன. மழை மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்ற போதும் கடும் மழை வராது எனவே நம்ப தோன்றுகிறது. மழை தூறல்களினால் போட்டி இடையிடையே நிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

6.26 PM

சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அண%B