இலங்கை, இந்தியா மோதல் – இந்தியாவுக்கு வெற்றி

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர கிண்ண போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் இலங்கை அணியினை வெற்றி பெற்றுக் கொண்டது. இந்த வெற்றி இந்தியா அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அடுத்த போட்டியில் இந்தியா அணி மோசமான தோல்வியினை சந்திக்காமல் தப்பித்துக்கொண்டாள்  இறுதிப் போட்டி வாய்ப்பு கிடைக்கும். இந்த தோல்வியானது இலங்கை அணி அடுத்த போட்டியில் நல்ல ஓட்ட நிகர சராசரி வேகத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்த நிலையை உருவாக்கியுள்ளது. இருப்பினும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி முடிவை வைத்தே எந்த முடிவுக்கும் வரலாம்.

இந்தியா அணியின் துடுப்பாட்டத்தின் போதும் விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போதும்,  அவர்கள் அதிரடியாக துடுப்பாட்ட எத்தணிக்கவில்லை. நிதானமாக ஓட்டங்களை ஓடி பெற்றுக்கொண்டார்கள். அடித்தாடக் கூடிய பந்துகள் கிடைத்த வேளைகளில் அடித்தாடினார்கள்.  இலங்கை அணியின் இறுதி நேர ஓட்ட வீழ்ச்சியே அவர்களின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இந்தியா அணி விக்கெட்களை இழந்தாலும் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடியும் என்ற நிலைக்குள்ளேயே ஓட்ட எண்ணிக்கையினை வைத்திருந்தார்கள்.

அகில தனஞ்செய அழுத்தங்களை வழங்கி பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். ஆனால் மற்றையவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசவில்லை. இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஆட்டமிழக்க மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தமக்குரிய பாணியில் துடுப்பாடினார்கள். குறிப்பாக மானிஷ் பாண்டி, போட்டியின் போக்கை தமக்கு சாதமாக வைத்துக்கொண்டேயிருந்தார். இறுதி நேரத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் அடித்தாட முயற்சிக்காமல் ஓட்டங்களை ஓடி பெற்றுக்கொடுத்து தமக்கான இலக்கை இலகு படுத்தினார். இலங்கை அணியின் பந்துவீச்சில் முழு நேர இரண்டாவது சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் போனதும் கூட இந்தியா அணியினை கட்டுப்படுத்த இயலாமல் போனது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்துக்கு தேவைதானா என்ற கேள்வி நிச்சயம் எழாமல் இல்லை. நால்வரில் ஒருவர் கூட சிறப்பாக பந்துவீசவில்லை.

153 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன்  துடுப்பாடிய இந்தியா அணி  17.3 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.  இதில் மானிஷ் பாண்டி ஆட்டமிழக்காமல் 42(31)ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 39(25) ஓட்டங்களையும் பெற்றனர்.  68 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றனர். சு ரேஷ் ரெய்னா 27(15) ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 18(17) ஓட்டங்களையும், ஷிகார் தவான் 11 (07) ஓட்டங்களையும் பெற்றனர்.  ரோஹித் ஷர்மா 08 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்செய 02 விக்கெட்களையும்(04 – 19/1), நுவான் பிரதீப் 01 விக்கெட்டினையும்(2.3 – 30/1), ஜீவன் மென்டிஸ் 01 விக்கெட்டினையும் (04 – 34/1) கைப்பற்றினார்கள். சுரங்க லக்மால் 02 ஓவர்களில் 19 ஓட்டங்களையும், டுஸ்மாந்த சமீர 03 ஓவர்களில் 33 ஓட்டங்களையும், திசர பெரேரா 02 ஓவர்களில் 17 ஓட்டங்களையும் வழங்கினார்கள்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சிறப்பான வேகமான ஆரம்பத்தை எடுத்த போதும், தொடர்ச்சியாக விக்கெட்கள் வீழ்த்தப்பட்டமை இலங்கை அணிக்கு போதியளவு ஓட்டங்களை பெற முடியாமல் போயுள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் போதியளவு நேர்த்தியான துடுப்பாட்ட பிரயோகங்களை பாவிக்க தவறிவிட்டனர் என தோன்றுகிறது. ஆனால் குசல் மென்டிஸ் இன்று துடுப்பாடிய விதம் மிகவும் சிறப்பாக அமைந்தது. க்ளீன் ஷொட் என கூறப்படும் நேர்த்தியான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டார். இலங்கை அணியின் துடுப்பாட்ட இட மாற்றங்கள் மற்றும் விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போது நிதானம் கார்த்து துடுப்பாடுவது என்பன போதாமல் உள்ளது. கடந்த பங்களாதேஷ் அணியுடனான போட்டியிலும் கூட இதே பிரச்சினை காணப்பட்டது. இன்றைய போட்டியில் திசர பெரேரா ஐந்தாமிடத்தில் களமிறங்கியதும், அவர் அடித்தாடிய விதமும் தேவையில்லதா ஒன்றாக காணப்பட்டது. ஓவர்கள் மீதமாகவுள்ள நிலையில், நிதானமாக துடுப்பாடியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு துடுப்பாடி ஓட்டங்களை ஓடி பெறக்கூடிய ஜீவன் மென்டிஸினை துடுப்பாட்ட அனுப்பியிருக்கலாம்.
இந்தியா அணிக்கு மிகப் பெரிய அழுத்தம் ஒன்றை வழங்கிவிட்டு இறுதியில் அவர்களிடம் மாட்டிக்கொண்ட நிலையாக, இலங்கை அணியின் நிலை மாறிப்போனது. இந்தியா அணியின் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக தென்படவில்லை. இந்த தொடர் முழுவதுமாக அவ்வாறான நிலை காணப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 19 ஓவர்கள் அடங்கிய இந்தப் போட்டியில் இலங்கை அணி 19 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. 100 ஓட்டங்களை 10.5 ஓவர்களில் பெற்ற இலங்கை அணியினால் இறுதியில் 152 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் தலா மூன்று ஆறு மற்றும் நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 55(38) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். உப்புல் தரங்க 22(24) ஓட்டங்களையும், தஸூன் சாணக்க 19 (16) ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 17(08) ஓட்டங்களையும், திசர பெரேரா 12(05) ஓட்டங்களையும் பெற்றனர். கடந்த போட்டிகளில் மிகவும் சிறப்பாக துடுப்பாடிய குசல் பெரேரா 03 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அகில தனஞ்செய 05 (11)ஓட்டங்களையும், சுரங்க லக்மால் ஆட்டமிழக்காமல் 05 (04) ஓட்டங்களையும் ஜீவன் மென்டிஸ் 01(03) ஓட்டத்தினையும் பெற்றனர்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் வோஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசினார். அவர் 02 விக்கெட்களை (04 – 21/2) கைப்பற்றிய அதேவேளை சர்டூல் தாகூர் 03 விக்கெட்களை (04 – 27/02) கைப்பற்றினார். தாகூரின் பந்துவீச்சும் கூட இன்றைய தினம் சிறப்பாகவே காணப்பட்டது. ஜெயதேவ் உனட்கட் 01 விக்கெட்டினையும்(03 – 33/1), யுஸ்வேந்த்ரா ஷஹால் 01 01 விக்கெட்டினையும்(04 – 34/1), விஜய் சங்கர் 01 விக்கெட்டினையும் (03 – 30/1)

-விமல்-
ஆர்.பிரேமதாச மைதானத்திலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*