இலங்கை, இந்தியா மோதல் – இந்தியாவுக்கு இலக்கு 153

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான சுதந்திர தினக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் 19 ஓவர்களில் 153 ஓட்டங்கள் பெறவேண்டுமென்ற வெற்றியிலக்கு இந்தியா அணிக்கு இலங்கை அணியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி சிறப்பான வேகமான ஆரம்பத்தை எடுத்த போதும், தொடர்ச்சியாக விக்கெட்கள் வீழ்த்தப்பட்டமை இலங்கை அணிக்கு போதியளவு ஓட்டங்களை பெற முடியாமல் போயுள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் போதியளவு நேர்த்தியான துடுப்பாட்ட பிரயோகங்களை பாவிக்க தவறிவிட்டனர் என தோன்றுகிறது. ஆனால் குசல் மென்டிஸ் இன்று துடுப்பாடிய விதம் மிகவும் சிறப்பாக அமைந்தது. க்ளீன் ஷொட் என கூறப்படும் நேர்த்தியான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டார். இலங்கை அணியின் துடுப்பாட்ட இட மாற்றங்கள் மற்றும் விக்கெட்கள்  வீழ்த்தப்பட்ட போது  நிதானம் கார்த்து துடுப்பாடுவது என்பன போதாமல் உள்ளது. கடந்த பங்களாதேஷ் அணியுடனான போட்டியிலும் கூட இதே பிரச்சினை காணப்பட்டது. இன்றைய போட்டியில் திசர பெரேரா ஐந்தாமிடத்தில் களமிறங்கியதும், அவர் அடித்தாடிய விதமும் தேவையில்லதா ஒன்றாக காணப்பட்டது. ஓவர்கள் மீதமாகவுள்ள நிலையில், நிதானமாக துடுப்பாடியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு துடுப்பாடி ஓட்டங்களை ஓடி பெறக்கூடிய ஜீவன் மென்டிஸினை துடுப்பாட்ட அனுப்பியிருக்கலாம்.

இந்தியா அணிக்கு மிகப் பெரிய அழுத்தம் ஒன்றை வழங்கிவிட்டு இறுதியில் அவர்களிடம் மாட்டிக்கொண்ட நிலையாக இலங்கை அணியின் நிலை மாறியுள்ளது. இலங்கை அணி இறுக்கமாக நல்ல முறையில் பந்துவீசாவிட்டால் இந்தியா அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்தியா அணியின் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக  தென்படவில்லை. இந்த தொடர் முழுவதுமாக அவ்வாறான நிலை காணப்படுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 19 ஓவர்கள் அடங்கிய இந்தப் போட்டியில் இலங்கை அணி 19 ஓவர்களில்  09 விக்கெட்களை இழந்து 152  ஓட்டங்களை பெற்றது.  100 ஓட்டங்களை 10.5 ஓவர்களில் பெற்ற இலங்கை அணியினால் இறுதியில் 152 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் தலா மூன்று ஆறு மற்றும் நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 55(38) ஓட்டங்களை  பெற்றுக் கொண்டார். உப்புல் தரங்க 22(24) ஓட்டங்களையும், தஸூன் சாணக்க  19 (16) ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 17(08) ஓட்டங்களையும், திசர பெரேரா 12(05) ஓட்டங்களையும் பெற்றனர். கடந்த போட்டிகளில் மிகவும் சிறப்பாக துடுப்பாடிய குசல் பெரேரா 03 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அகில தனஞ்செய  05 (11)ஓட்டங்களையும், சுரங்க லக்மால் ஆட்டமிழக்காமல் 05 (04) ஓட்டங்களையும்   ஜீவன் மென்டிஸ் 01(03) ஓட்டத்தினையும் பெற்றனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் வோஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசினார். அவர் 02 விக்கெட்களை (04 – 21/2) கைப்பற்றிய அதேவேளை சர்டூல் தாகூர் 03 விக்கெட்களை (04 – 27/02) கைப்பற்றினார்.  தாகூரின் பந்துவீச்சும் கூட இன்றைய தினம் சிறப்பாகவே காணப்பட்டது. ஜெயதேவ் உனட்கட் 01 விக்கெட்டினையும்(03 – 33/1), யுஸ்வேந்த்ரா ஷஹால் 01 01 விக்கெட்டினையும்(04 – 34/1), விஜய் சங்கர் 01 விக்கெட்டினையும் (03 – 30/1)

8.20 PM

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான சுதந்திரக் கிண்ண தொடரின் நான்காவது போட்டி ஆரம்பித்துள்ளது. இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவேண்டிய போட்டி மழை காரணமாக இரவு 8.20 இற்கே ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

-விமல்-
ஆர்.பிரேமதாச மைதானத்திலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*